நாகை மீனவர்களிடம் இலங்கை கடற்கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
நாகையில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களிடம் நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்கொள்ளையர்கள் 3.5 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றுள்ளனர். நாகையில் உள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன், ராஜா, சம்பந்தன் மற்றும் ராமகண்ணு ஆகிய நான்கு மீனவர்கள் கடந்த 29ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. கோடியக்கரைக்கு தென்கிழக்கே 30 மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ஐந்து அதிவேக படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் இவர்களை சுற்றி வளைத்து கத்தி பெட்ரோல் வெடிகுண்டு இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் படகில் ஏறி உள்ளனர்.
கழுத்தில் கத்தியை வைத்தவாரே அவர்களிடம் இருந்து 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வலைகள் அத்தனையையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனையடுத்து உயிருடன் கரை திரும்பிய மீனவர்கள் இதுகுறித்து நாகப்பட்டினம் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பாதிக்கப்பட்ட நாகை மீனவர்கள் இன்று தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ எஸ் மணியனிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் தங்களது வலைகளை மீட்டுத் தருமாறும் வலியுறுத்தியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…