ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்.!
ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற போது கச்சத்தீவு அருகே வைத்து இலங்கை கடற்படையினர் கல் மற்றும் பாட்டில்களை வீசி ராமேஸ்வரம் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் 3 ஆயிரம் மீனவர்கள் பெரும் நஷ்டத்துடன் கரை திரும்பினர். அதனையடுத்து, இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இலங்கை கடற்படையினர் நடத்தியதாக்குதலில் சில மீனவர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Visuals of Lankan Navy personnel attacking Tamil Indian fishermen caught on camera.@DrSJaishankar@offiofDJ pic.twitter.com/ZfTlGPJrGx
— Pramod Madhav♠️ (@PramodMadhav6) October 27, 2020