இலங்கை கடற்படை அட்டூழியம் – வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்..!

நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தில் இருந்து, 500-க்கும் மேற்பட்ட விசைப்படகில், 2000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மற்றும் அவர்கள் வைத்திருந்த 5 படகுகளை பறிமுதல் செய்ததோடு, 27 மீனவர்களையும் கைது செய்தனர்.
இந்த நிலையில், இலங்கை கைதை எதிர்த்து, மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாம்பன் சாலை பாலத்தில் நாளை மறுநாள் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் கைது சம்பவங்கள் மீனவ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மீன்பிடி தொழிலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்கள் கைதால் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. தூதராக ரீதியான நடவடிக்கை மேற்கொண்டு மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025