தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை!

Fisherman

தமிழக மீனவர்களை மீண்டும் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

நேற்று நள்ளிரவில் நெடுந்தீவு அருகே 6 தமிழக மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி, படகுடன் அனைவரையும் கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கின்ற்னர்.  கடந்த ஒருவாரத்தில் 30க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுமார் 100க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் ராமேஸ்வரம் வந்ததை முன்னிட்டு, இலங்கை சிறைகளில் உள்ள தமிழ்நாட்டை சேர்ந்த மீனவர்கள் 40 பேரை நல்லெண்ணம் அடிப்படையில் விடுதலை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டது.

பிரதமர் மோடி தமிழகம் வருகை – 40 மீனவர்கள் விடுதலை.!

விடுதலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் 2 நாட்களில் தமிழகம் திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இலங்கை கடற்படை 6 ராமேஸ்வரம் மீனவர்களை கைது செய்தது அப்பகுதியை சேர்ந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்