1,100 பணியாளர்களை பணி நீக்கம் செய்யும் ஸ்விகி ஆன்லைன் நிறுவனம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலால், ஊரடங்கு உத்தரவு பிராபிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டது. இந்நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியிடப்பட்ட தளர்வுகளை தாண்டியும் தொழிற்துறை இயல்புநிலைக்குத் திரும்பவில்லை.
தொழில் நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருவதையடுத்து, பல தொழில் நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விகி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்விகி நிறுவனம் இதுதொடர்பாக வெளியிட்ட அறிவிப்பில், ‘ஸ்விகி நிறுவனத்துக்கு இது மிகவும் சோகமான தினங்களில் ஒன்று எனவும், எதிர்பாரதவிதமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு மூன்று மாத ஊதியம் வழங்கப்படும் என்றும், ஸ்விகி நிறுவனத்தில் பணியாற்றிய வருடங்களின் அடிப்படையில் ஒரு வருடத்துக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்படும் என்றும், பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கான டிசம்பர் 31-ம் தேதி வரை மருத்துவ காப்பீடு இந்த ஆண்டு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதுபோல சொமேட்டோ நிறுவனமும் 13 % பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட்…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
சென்னை : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், தமிழகத்திற்கு…
கேரளா : மத்திய பட்ஜெட் 2025 – 2026-ஐ இன்று நாடாளுமன்றத்தில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், வருமானவரி…
சென்னை : கடைசியாக தனது சொந்த இயக்கத்தில் "ராயன்" படத்தில் நடித்த நடிகர் தனுஷ் தற்போது 'நிலவுக்கு என்மேல் என்னடி…
டெல்லி : ஆண்டு தோறும் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளில், பொதுவாக பங்குச்சந்தை பரபரப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும்…