சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் பயன்பாட்டுக்கு வருகிறது ஸ்புட்னிக்-வி தடுப்பூசி…! எப்போது….?
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வரும் ஜூன் இரண்டாம் வாரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் தொற்று பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ள தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் வரும் ஜூன் இரண்டாம் வாரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மத்திய அரசு ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து, கடந்த 17-ஆம் தேதி ஹைதராபாத்தில் தடுப்பூசிகள் பரிசோதனைக்காக செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அப்போல்லோ நிர்வாக துணைத் தலைவர் ஷோபனா காமினேனி கூறுகையில், “நாட்டின் 80 இடங்களில் 10 லட்சம் தடுப்பூசிகள் போட்டு உள்ளோம். முன்னணி தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் இரண்டு கோடி தடுப்பூசிகளை வழங்கும் திட்டத்தில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.