Spruce canal irrigation: தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு.! தமிழக அரசு ஆணை.!
திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு பழைய ஆயக்கட்டுப் பாசனமான தளி வாய்க்கால் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, தளி வாய்க்கால் பாசனத்திற்கு செப்டம்பர் 20ம் தேதி முதல் டிசம்பர் 31ம் தேதி வரை ஒரு நிரப்பிற்கு, நீரிழப்பு உட்பட, மொத்தம் 250 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட விட அரசு உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம், திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டத்திலுள்ள 2,786 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.