Nipah virus : பரவும் நீபா வைரல்… தமிழக எல்லையில் தீவிர கண்காணிப்பு.! பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை.!

Nipha virus

கேரளாவில் தற்போது நிபா வைரஸின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏற்கனவே கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

கேரளாவில் இதுவரை சுமார் 125 பேர் காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும, அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகளுக்கு அனுமதி இல்லை என்றும், அத்தியாவசிய கடைகளும் காலை ஏழு மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக எல்லைகளில் சோதனைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டம் பந்தலூர் எல்லை, தென்காசி மாவட்டம் புளியரை எல்லை, தேனி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லை பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், தமிழக கேரளா எல்லையின் முக்கிய பகுதியான கோவை மாவட்டம் வாளையாறு பகுதியிலும் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அங்கிருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து அதன் பின்னர் தான் தமிழகத்திற்கு உள்ளே அனுப்பப்படுகிறார்கள்.

காய்ச்சல் தீவிரமாக இருந்தால், அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். மேலும், கேரளாவில் கோழிக்கூடு அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியத்தின் ஒரு பகுதியான மாஹே பகுதியில் இன்று முதல் 17ஆம் தேதி வரையில் அங்குள்ள பள்ளி கல்லூரிகளுக்கு முன்னெச்சரிக்கை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்