விளையாட்டுத் துறை ‘ஸ்டார்’ துறையாக வளர்ந்து வருகிறது – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Tamilnadu CM MK Stalin in Tanjore

ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு வீரர்கள் அதிக பதக்கங்களை வென்றுள்ளார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்கங்களில் 28% தமிழ்நாட்டில் இருந்து பெற்றுள்ளோம். விளையாட்டுத் துறையின் அமைச்சர் ஸ்டாராக இருப்பதால், இந்த துறையும் ‘ஸ்டார்’ துறையாக வளர்ந்து வருகிறது.

விளையாட்டுத்துறையில் கேப்டனாக இருந்து அமைச்சர் உதயநிதி அவர்கள், அனைத்து விளையாட்டு வீரர்களையும் சாம்பியனாக உருவாக்கி வருகிறார். சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சிகளில் உள்ள கிராமங்களில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளது.

விளையாட்டு என்பது உடல் வலிமையையும், உள்ள வலிமையையும் மேம்படுத்தக் கூடியது. படிக்கும் காலத்தில் ஒவ்வொரு மாணவர்களும் ஏதாவது ஒரு விளையாட்டை தேர்ந்தெடுத்து அதில் பங்கேற்கும் வகையில் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆசிய போட்டிகளில் 5-வது இடத்தில உள்ள தமிழ்நாடு, முதல் இடத்திற்கு முன்னேற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். மேலும்,  ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் பரிசு வழங்கினார். தமிழக வீரர், வீராங்கனைகள் 20 பேருக்கு, ரூ.9.4 கோடி ரொக்க பரிசு வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்