என்னை தான் மறைமுகமாக அவர் கூறினார்.! அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைச்சர் உதயநிதி கலகலப்பான பேச்சு.!

udhayanidhi stalin

அண்ணா பல்கலைக்கழக விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். 

இன்று சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணி குறித்த விழா ஒன்று நடைபெற்றது. அதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் . அவர் பேசுகையில் தான் வகித்து வந்த சிண்டிகேட் பதவி குறித்தும் பேசினார்.

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் குழு என்பது ஆட்சி மன்ற குழுவாகும். அண்ணா பல்கலைக்கழகம் குறித்த முக்கிய முடிவுகளை இந்த குழு எடுக்கும். இதில் எம்எல்ஏவாக இருந்த போது உதயநிதி ஸ்டாலின் பதவியில் இருந்தார். அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் இதில் இருந்து விலகிக்கொண்டார்.

முதலில் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் , சிண்டிகேட் ஆட்சி மன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஆலோசனை கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கூறினார். அதன் பிறகு பேச வந்த அமைச்சர் உதயநிதி, துணைவேந்தர் வேல்ராஜ் கூறியது என்னைத்தான். நான் தான் சிண்டிகேட் உறுப்பினராக இருந்த போது கூட்டத்தில் கலந்து கொண்டது இல்லை. ஒரே ஒரு கூட்டத்தில் தான் கலந்து கொண்டேன் என கூறியதும், அரங்கத்தில் சிரிப்பலை எழுந்தது.

அதன் பிறகு, தான் விலகிவிட்டேன். தற்போது, எம்எல்ஏ பரந்தாமன் புதிய உறுப்பினராக சேர்ந்துள்ளார். அவர் கண்டிப்பாக சிண்டிகேட் ஆலோசனை கூட்டத்திற்கு வந்துவிடுவார் என கூறியதும், அரங்கும் மேலும் சிரிப்பலை மூண்டது. அடுத்ததாக தனது என்எஸஎஸ் மாணவர் படை அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்