ஐடிஐ மாணவ மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள்; தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி.!
ஐடிஐ பயிற்சி பெறும் மாணவ மாணவியருக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் உதயநிதி இன்று தொடங்கி வைத்தார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு அரசு சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கிடையே மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று நடைபெற்றது.
இந்த விளையாட்டுப்போட்டிகளை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கிவைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஐடிஐ பயிற்சி பெறும் மாணவ மாணவியருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி பெறும் வீரர்- வீராங்கனைகள் மேலும் பல சாதனைகளை புரிய வேண்டும் எனவும், அவர்களின் முயற்சிக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணை நிற்கும் எனவும் கூறினார்.
தொழிலாளர் நலத்துறை சார்பில் ITI பயிற்சியாளர்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இன்று தொடங்கி வைத்தோம். இதில் வெல்லும் வீரர்- வீராங்கனைகள் மேலும் பல சாதனைகளை புரிய விளையாட்டு மேம்பாட்டுத்துறை துணை நிற்கும். @cvganesan1 @PKSekarbabu @Subramanian_ma @Dayanidhi_Maran pic.twitter.com/mZd8C668Ag
— Udhay (@Udhaystalin) April 17, 2023
மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, ஷட்டில் காக் விளையாடியும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுடன் கேரம் விளையாடியும், எம்.பி தயாநிதி மாறனுடன் செஸ் விளையாட்டு விளையாடியும், மாணவர்களுடன் நின்று செல்ஃபி எடுத்தும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.<
தொழிலாளர் நலன் & திறன் மேம்பாட்டுத்துறை ஏற்பாட்டில் ITI பயிற்சி பெறும் மாணவ- மாணவியருக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தோம். வீரர் – வீராங்கனையரின் உற்சாகத்தில் பங்கேற்கும் விதமாக நாமும் Chess, Shuttle Cock விளையாடினோம். நன்றி. @SportsTN_ @cvganesan1 @Dayanidhi_Maran pic.twitter.com/ySjjBQVMsB
— Udhay (@Udhaystalin) April 17, 2023
/p>