தெலுங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகவும் பொறுப்பில் இருக்கும் தமிழிசை சௌந்தராஜன் நேற்று விழுப்புரத்தில் நடைபெற்ற ஆன்மீக விழாவில் கலந்து கொண்டு கம்பராமாயணம் பற்றியும், தமிழை பற்றியும் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தமிழில்லாமல் ஆன்மிகம் இல்லை. ஆன்மிகம் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மிகம் தான் தமிழை வளர்த்தது. பல்வேறு புலவர்கள் தமிழில் ஆன்மீக பாடல்கள் பாடி தமிழை வளர்த்துள்ளனர் என குறிப்பிட்டார்.
மேலும், தமிழகத்தில் தமிழிக்கும் ஆன்மீகத்திற்கு சம்பந்தமில்லை என்பது போல உருவகம் செய்து வருகின்றனர். தமிழையும் ஆன்மீகத்தையும் எப்போதும் பிரிக்க முடியாது. என குறிப்பிட்ட அவர் அடுத்து, கம்பர் கம்பராமாயணம் எழுதியதுபற்றி கூறினார்
கம்பர், கம்பராமாயணம் அரங்கேற்றும் போது இரனிய காண்டம் இல்லை. அதனை அவர் பாடுகையில் கோபமாக இருந்த நரசிம்மர் சிலை சிரித்தது. தமிழை கேட்டால் சிலை போல இருப்பவர்களும் சிரிப்பார்கள். கம்பராமாயணத்தில் ஒரு நாடு எப்படி இருக்க வேண்டும் என்றும், தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்றும், அரசியல் எப்படி இருக்க வேண்டும் என்றும் கம்பராமாயணம் கூறுகிறது. அதில் ராமர் முகம் ஓவிய தாமரை போல இருக்கும் என்றும் அந்த விழாவில் தமிழிசை சவுந்தராஜன் உரையாற்றினார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…