பெண்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள்…!

Default Image

பெண்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஆன்மீக குறிப்புகள் பற்றி கீழே காண்போம்.

உலகத்தில் சமூகம், அரசியல்,மருத்துவம்,ஆன்மீகம் என எந்த துறையானாலும் பெண்களின் பங்கு மிகப் பெரியது.மேலும்,பெண்கள் குடும்ப பொறுப்புகளில் சிறப்பாக செயல்படுகின்றனர்.அதில் குறிப்பாக,பூஜை, வாஸ்து மாதிரியான சின்ன சின்ன விசயங்களில் கூடுதல் கவனமுடன் உள்ளனர்.

அதன்காரணமாக,தினசரி வாழ்வில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய குறிப்புகளை இப்பதிவில் பார்க்கலாம்.

காலை எழுதல்:

சூரியன் உதயத்திற்கு முன்பு எழுவதால் பெண்கள் எப்பொழுதும் வாழ்வில் வெற்றிப் பெறலாம்.

கோலமிடுதல்:

வீடுகளில் வாசல் தெளிக்கும்பொழுது தண்ணீரில் சாணத்துடன் மஞ்சள் கலந்து வாசல் தெளித்தல் வேண்டும்.பின்னர்,கோலமிடும் போது பெண்கள் தெற்கே பார்த்தவாறு அமர்ந்து கோலமிடக் கூடாது.

மாறாக,வடக்கு மற்றும் சூரியனை வரவேற்று கோலமிடுதல் மிகச்சிறப்பு. ஆனால்,அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

கோவில்:

கர்ப்பமான பெண்கள் உக்ரமான தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு செல்லக்கூடாது.எனினும்,பிற கோவிலுக்கு மட்டும் சென்று வரலாம். மேலும்,அவர்கள் விரதம் கடைப்பிடிக்க வேண்டிய அவசிய இல்லை.

கோவில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை பெண்கள் தங்கள் தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.

கோவிலில்,சாமியை வணங்கும் போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

குங்குமம் வைக்கும் முறை:

பெண்கள் கிழக்கு திசையை நோக்கி நின்று பின்னர் குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள்,உச்சந்தலையில் இட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

மெட்டி அணிதல்:

திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும்.ஒரே காலில் இரண்டு மூன்று அணியக்கூடாது.அப்படி அணிவதால் ஆரோக்கியம் பாதிப்பு அடையும்.

குளியல்:

பெண்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமையன்று தலைக்கு குளித்தல் சிறப்பானதாகும்.ஏனெனில்,இது உடலில் உள்ள தேவையற்ற எதிர்மறை ஆற்றல்களை குறைத்து ஆன்ம அமைதியை கொடுக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்