சிந்திய இரத்தம் வீண் போகாது – தொல். திருமாவளவன்
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான உயர்நீதிமன்றம் தீர்ப்பு பலியான 13 பேருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் யாவருக்கும் அளிக்கப்பட்ட நீதி- தொல் திருமாவளவன்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ஆலையை திறக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை அரசியல் பிரபலங்கள் பலரும் வரவேற்று வரும் நிலையில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கூறுகையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பு, பலியான 13 பேருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் யாவருக்கும் அளிக்கப்பட்ட நீதி என்றும் சிந்திய இரத்தம் வீண் போகாது எனவும் தெரிவித்துள்ளார்.
#ஸ்டெர்லைட் : உயர்நீதிமன்றத் தீர்ப்பு, பலியான 13பேருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் யாவருக்கும் அளிக்கப்பட்ட நீதி.
சிந்திய இரத்தம் வீண் போகாது!— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 18, 2020