இன்று ஒருநாளாவது வெள்ளை மனம் கொண்ட குழந்தைகளுடன் ஒரு மணி நேரம் செலவு செய்யுங்கள் ..!

Default Image

நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ம் தேதி இன்று நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து பெற்றோர்களுக்கும் செல்போன்கள் உள்ளிட்ட பிற சாதனங்களை ஒதுக்கிவைத்து விட்டு தங்களது குழந்தைகளோடு ஒரு மணிநேரம் செலவிடவேண்டும் என தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறைக்கு  கேட்டுக் கொண்டது.
Image result for நேரு
இப்பொது உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் தங்களின் செல்ல பிள்ளைகளாக செல் போனிடம் மட்டுமே அதிக நேரத்தை செலவு செய்கிறார்.தங்களது குழந்தைகள் தேர்வில் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் , தங்கள் குழந்தைகளுடன் சிறிது நேரத்தை கூட செலவு செய்வதில்லை.
அனைத்துப் பாடங்களுக்கும் தனித்தனியே டியூசன் அனுப்புவதை தான் கௌரவம் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.எப்போது உள்ள எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் தினமும் பள்ளி முடிந்து வந்த உடன் ஒரு அரைமணி நேரம் பள்ளியில் நடந்தை கேட்டு தெரிந்து கொள்கிறீர்கள்..?
Image result for குழந்தை டியூசன்
இப்பொது உள்ள பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தை பள்ளி முடிந்து வந்த உடன் சாப்பிடவைத்து உடனே டியூசனுக்கு அனுப்பி வைத்து விடுகிறார்கள்.குழந்தைகள் எந்த மன நிலையில் உள்ளார்கள் என்பதை பெற்றோர்கள் கேட்டு தெரிந்து கொள்வது கிடையாது.
பள்ளி முடித்ததும் வரும் அனைத்து குழந்தைகளும் சோர்வாக வருவார்கள் அவர்களுக்கு ஜீஸ் , காபி அல்லது உடலுக்கு வலிமை தரக்கூடிய பயிறு வகைகள் கொடுத்து சாப்பிட வைத்து அன்று பள்ளியில் நடந்தவற்றை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
பள்ளியில் காலை செல்லும் போது குழந்தையின் முகம் எப்படி இருக்கிறது.பள்ளி முடிந்து வரும்போது குழந்தையின் முகம் எப்படி இருகிறது என பெற்றோர்கள் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். குழந்தையின் முகம் சந்தோஷசமாக இருந்தாலும் ,சரி  சோகமாக இருந்தாலும் சரி அவற்றை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
Image result for பள்ளிக்கு குழந்தையை வழி அனுப்பும் பெற்றோர்
வேலைக்குச்செல்லும் பெற்றோர்கள் குழந்தைகளோடு நேரம் செலவிடுவதும் இல்லை. இதனால் குழந்தைகள் தனிமையாக வளர்கிறார்கள். வேலைக்குச்செல்லும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் நலனுக்கான தான் வேலைக்கு செல்கிறார்கள்.
ஆனால் அதுவே சில நேரங்களில் குழந்தைகளுக்கு மனவேதனையை ஏற்படுத்துகிறது. என்னதான் வேலைகள் இருந்தாலும் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை தினமும் ஒரு அரைமணி நேரம் அவர்களுடன் வெளியில் நடைபயணமாக சென்று மனம் விட்டு பேச வேண்டும்.அப்படி இல்லையென்றாலும் வீட்டில் குழந்தைகளின் பக்கத்தில் அமர்ந்து மனம் விட்டு ஒரு நண்பராக பேச வேண்டும்.
Image result for குழந்தைகள் தினமும் நடக்க வேண்டும்
அதுவும் இல்லையென்றாலும் மொபைல் போனில் விளையாட பல மணி நேரம் ஒதுக்கும் நமக்கு நாம் குழந்தைகளுடன் குழந்தையாக மாறி தினமும் அரைமணி நேரமாவது விளையாடுங்கள்.இதனைக் கருத்தில் கொண்டுதான் இன்று  மாலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை செல்போன்கள் உள்ளிட்ட சாதனங்கள் பயன்படுத்தாமல்  குழந்தைகளோடு நேரம் செலவழிக்க வேண்டும் என தமிழக அரசு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்