கைதிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புழல் சிறை வளாகத்திலேயே தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில், இந்தியாவிலும் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமானோர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் இதுவரை பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதுவரை 13,362 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அங்கு 113 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள சிறைக் கைதிகளுக்கும் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
30 கைதிகள் மற்றுமொரு தூய்மைப் பணியாளருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், புழல் சிறை வளாகத்திலேயே நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு வார்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் சேர்த்தால் மொத்தம் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…
அமெரிக்கா : அதிபரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஷ் மற்றும் டொனால்ட் டிரம்ப்பு…