பயணிகளுக்கு சிறப்பு ரயில்கள்.! தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு.!
தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி தாம்பரம் – நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் – சென்னை எழும்பூர் இடையே சிறப்பு ரயில்களை இயக்குவதாகத் தெற்கு ரயில்வே அதிரடியாக அறிவித்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 8ம் தேதி முதல் ஜூலை 1ம் தேதி வரை புதன்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 5.25 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
இதையடுத்து ஏப்ரல் 9ம் தேதி முதல் ஜூலை 2ம் தேதி வரை வியாழக்கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து இரவு 7.40 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை சென்னை எழும்பூர் வந்தடையும். இந்தச் சிறப்பு ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது என தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது.