தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ரத்து.! தெற்கு ரயில்வே அறிவிப்பு.!
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அனுமதி வழங்கியது. இதன்படி, கோவை -காட்பாடி, மதுரை -விழுப்புரம், திருச்சி -நாகர்கோவில், கோவை -மயிலாடுதுறை ஆகிய நான்கு வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமாக இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்களை வருகின்ற நாளை மறுநாள் முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு 6 மாதத்திற்குள் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.