சேலம் வழியாக இன்று முதல் கோவை-திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற ஜூலை 9 ஆம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு கோவை மற்றும் திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 4 நாட்களுக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 1.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஜூலை 10 முதல் சனி, திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய 4 நாட்களில் 2.55 மணிக்கு திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில் அன்றிரவு 10.45 மணிக்கு கோவை வந்தடையும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது சேலம், திருப்பூர், ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று முதல்…
திருவாரூர் : வருகின்ற நவம்பர் 30-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. திருவாரூரில் உள்ள தமிழ்நாடு…
சென்னை : பிரபல லாட்டரி தொழிலதிபர் மார்ட்டின் தொடர்புடைய பல்வேறு இடங்களில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி முதல் அமலாக்கத்துறையினர் …
சென்னை : நயன்தார விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் நவம்பர் 20-ஆம் தேதி வெளியாகவுள்ளது.…