அரக்கோணம் – கோவை இடையில் சிறப்பு ரயில் சேவை தொடங்கியது.!
அரக்கோணம் – கோவை இடையில் சிறப்பு ரயில் சேவை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக வருகின்ற 12-ம் தேதி அதாவது இன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்து இருந்தது. இந்நிலையில், இந்த சிறப்பு ரயில் இன்று காலை 7 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு உள்ளது.
இந்த ரயில் மதியம் 2.05 மணிக்கு கோவை சென்றடையும். பின்னர், கோவையில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்பட்டு அரக்கோணத்திற்கு இரவு 10 மணிக்கு சிறப்பு ரயில் வந்தடைய உள்ளது. இந்த ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.