தமிழகத்தில் இருந்து புறப்படுகிறது முதல் சிறப்பு ரயில்.!
தமிழகத்தில் இருந்து முதல் சிறப்பு ரயில் மூலம் 1140 பேர் புறப்பட்டு ஜார்கண்ட் வரை செல்கின்றனர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊரடங்கு வருகின்ற மே 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. இதைத்தொடர்ந்து தங்கள் மாநிலங்களை விட்டு வேறு மாநிலங்களில் உள்ள மாணவர்கள், தொழிலார்கள் என அணிவரையும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல மத்திய அரசு சிறப்பு ரயில்களை இயக்க முடிவு செய்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழகத்தில் சிக்கியிருக்கும் வெளிமாநிலத்தவர்களை இன்று இரவு சிறப்பு ரயில் மூலம் அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகிறது. இதனால், வேலூர் மாவட்டம் காட்பாடியிலிருந்து முதல் சிறப்பு ரயில் தமிழகத்தில் இருந்து புறப்பட்டு ஜார்கண்ட் வரை ரயில் செல்கிறது. இந்த ரயிலில் மொத்தமாக 1140 பேர் செல்ல உள்ளனர்.