பொங்கலை முன்னிட்டு தாம்பரம் – திருச்சி இடையே 9 நாட்களுக்கு சிறப்பு ரயில்.!
பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் – திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
4,5,10,11,12,13,17,18,19 தேதிகளில் திருச்சியிலிருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் (06190) மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். அதே நேரம், 4,5,10,11,12,13,17,18,19 தேதிகளில் தாம்பரத்திலிருந்து நண்பகல் 03.30 மணிக்கு புறப்படும் ரயில் (06191) இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயிலானது தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருத்துவத்தூர், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படுகிறத. மேலும், இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🚆Pongal Festival Special Trains✨
To accommodate the extra rush of passengers during the #Pongal2025 special train, Train No. 06190/06191 Jan Shatabdi Superfast Specials, will operate between #Tiruchchirappalli & #Tambaram
Advance Reservation are open from #SouthernRailway end pic.twitter.com/FbeYRU1rqn
— Southern Railway (@GMSRailway) January 3, 2025