சிறப்பாசிரியர் தேர்விலும் குளறுபடி…….அம்பலமானது ஆசிரியர் தேர்வு வாரியத்தின் குட்டு……திறமை நசுக்கப்படுகிறதா.!!திறமை மட்டும் போதுமா….???
தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய சிறப்பாசிரியர் தேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில் தமிழக பள்ளிகளுக்கு தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய 1,325 சிறப்பாசிரியர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது.
இதன் பின் கடந்த ஆகஸ்ட் 16-ஆம் தேதி சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, தேர்வானவர்களின் இறுதிப்பட்டியல் கடந்த வெள்ளியன்று இணையத்தில் வெளியிடப்பட்டது.
இதில் பல அதிர்ச்சி தகவல்கள் மற்றும் குளறுபடிகள் நடந்திருப்பது இப்போது தெரியவந்துள்ளது.இந்த நிலையில் தகுதியுள்ள பலரது பெயர்கள் விடுபட்டிருப்பதோடு, தகுதியற்ற, குறைவான மதிப்பெண் பெற்றுள்ள பலரது பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உடற்கல்வி பிரிவில் தேர்வெழுதியவர்களில் குறிப்பிட்ட சில பாடங்களை படித்தவர்கள் ( C.P.Ed, D.P. ed) நிராகரிக்கப்படுவதாகவும், இது குறித்து தேர்வுஅறிவிக்கையில் குறிப்பிடவில்லை என்றும் பாதிக்கப் பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஊழல் எல்லா துறைகளிலும் நுழைந்து தலைவிரித்தாடுவதை நாட்டு மக்களும் கண்டு தான் வருகிறார்கள் ஊழலை மறைவாக செய்து வந்தவர்கள் தற்போது வெளிப்படையாக தைரியமாக செய்வது வருத்தத்தையும்,அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.திறமை வாய்ந்தவர்கள் பணம் இல்லை என்றால் திறமை இருந்தும் திறமை அற்றவராகவே இக்காலகட்டத்தில் கருதப்படுவது நெஞ்சில் வலியை ஏற்படுத்துகிறது. பணம் இல்லாதவர்களுக்கு அவர்களின் திறமையே சொத்து ஆனால் இப்பொழுது அந்த திறமையே பணத்திற்காக நசுக்கப்படுவது வேதனையளிக்கிறது.
DINASUVADU