காவலர் ரேவதியை தொடர்ந்து சாட்சியாக மாறும் சிறப்பு எஸ்.ஐ.பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ்!
காவலர் ரேவதியை தொடர்ந்து சாட்சியாக மாறும் சிறப்பு எஸ்.ஐ.பால்துரை மற்றும் காவலர் முத்துராஜ்.
சிபிசிஐடி போலீசார் நேற்று காலை தந்தை, மகன் வழக்கு தொடர்பான விசாரணையை தொடங்கியது. சிபிசிஐடி போலீசார் நேற்று முதல் ஜெயராஜ் வீடு, கடை மற்றும் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையை தொடர்ந்து இரவு போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, தந்தை, மகன் கொலை வழக்கில் இதுவரை 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர் ரேவதி, இந்த சம்பவம் குறித்து சாட்சி கூறியுள்ள நிலையில், சாத்தான்குளம் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரை, காவலர் முத்துராஜ் ஆகியோர் சாட்சியாக மாற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறப்பு எஸ்.ஐ பால்துரை, சம்பவத்தை நேரில் பார்த்தவராக சாட்சியம் அளிக்க உள்ளதால், அவர் கைது செய்யப்படவில்லை என்றும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் காவலர் முத்துராஜ் அப்ரூவராக மாறினாலும், அவர் கைது செய்யப்படுவார் என்றும் சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.