சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை – நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு!
மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்புப்படி உயர்வு.
தமிழகத்தில் மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்பு படியினை மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்க நிதி ஒதுக்கீடு செய்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
2021-22-ஆம் கல்வி ஆண்டு முதல் மாநில அரசின் சிறப்பு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பராமரிப்புப்படியினை மத்திய அரசின் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைக்கு இணையாக உயர்த்தி வழங்குவதற்காக ரூ.8,79,00,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவு ரூ.4.63 கோடி ஆகும் என்றும் இந்த திட்டத்தின் கீழ் 26024 மாணாக்கர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்படுகிறது.