பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகை – மருத்துவர் பணியிடமாற்றம்..!

Default Image

பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ டியூப்பில் வீடியோ பதிவேற்றம் செய்ததாகவும், பப்ஜி மூலம் பண மோசடியில் செய்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்து பப்ஜி மதனை போலீசார் தேடி வந்த நிலையில், போலீசார் கடந்த ஜூன் மாதம் பப்ஜி மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவை கைது செய்தனர்.

பின்னர், பப்ஜி மதன்மனைவி கிருத்திகாவிற்கு மட்டும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு தற்போது புழல் சிறையில் உள்ளார். அவர்கள் மீதான வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புழல் சிறையில் பப்ஜி மதனுக்கு சிறப்பு சலுகை வழங்கியதாக  சிறை மருத்துவர் நவீன் மானாமதுரைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பப்ஜி மதன் சிறைக்குள் சொகுசு வாழ்க்கை வாழ சிறைக்காவலர் ஒருவர் மதன் மனைவி கிருத்திகாவிடம் பேரம் பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining