மாநில அரசுகளுக்கு சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் – பிரதமருக்கு, முதலமைச்சர் கடிதம்!!

Published by
பாலா கலியமூர்த்தி

கொரோனாவால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்.

இதுதொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்புயுள்ளார். அதில், கொரோனா தொற்றால் அனைத்து மாநிலங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்தத் தேவையான தடுப்பூசிகளையும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான மருந்துகளையும் மாநில அரசுகள் கொள்முதல் செய்து வருகின்றன.

இதனைக் கருத்தில்கொண்டு ஜிஎஸ்டி கவுன்சிலோடு கலந்தாலோசித்து, இந்தப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறிப்பிட்ட காலத்திற்கு பூஜ்ய சதவீகிதம் என நிர்ணயிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சி கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மாநில அரசுகளின் வரி வருவாய் வளர்ச்சி பெருமளவில் குறைந்துள்ளதால், அதனை ஈடுசெய்ய கீழே குறிப்பிட்டுள்ள 3 நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு மாநில அரசுகளுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

  1. நிலுவையிலுள்ள ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகைகளையும், மாநில நுகர்பொருள் கழகங்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ள அரிசி மானியத் தொகையையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.
  2. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் மேல்வரி விதிப்பால் மத்திய அரசுக்குக் கிடைத்துள்ள பகிர்ந்தளிக்கப்படாத நிலையில், கொரோனா தொற்றால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ள நிதி இழப்பீட்டை ஈடுசெய்ய சிறப்பு நிதி உதவி (Adhoc Grants-in-aid) அளிக்கப்பட வேண்டும்.
  3. இக்காலத்தில் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினங்களை மேற்கொள்ளத் தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக, அனுமதிக்கப்பட்டுள்ள கடன் வாங்கும் அளவை, மாநிலத்தின் உற்பத்தி மதிப்பில் மூன்று சதவிகிதம் என்ற அளவிலிருந்து மேலும் ஒரு சதவிகிதம் உயர்த்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…

22 minutes ago

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?.

சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி  குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…

26 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…

58 minutes ago

சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பயணிகள் தவிப்பு.!

சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…

1 hour ago

தமிழகத்தில் சனிக்கிழமை (21/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…

1 hour ago

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி! 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அசத்தல்!

நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  3 டி0 போட்டிகள், 3…

2 hours ago