குமரியில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு சிறப்பு திருப்பலி…!!!
அகில உலக மீனவர் தினத்தை முன்னிட்டு குமரியில் சிறப்பு திருப்பலிக்கு நடைபெற்றது.
அகில உலக மீனவர் தினத்தை முன்னிட்டு குளச்சல் மீன்பிடி துறைமுக நடவடிக்கை குழு சார்பில் உலக மீனவர் தின திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலியை முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை தாங்கி நடத்தினார். அதன் பின் புனித நீர் ஊற்றி மீன்பிடி கருவிகளையும், கடலையும் அர்ச்சித்தார். இந்த திருப்பலியில் அனைத்து மீனவ பொதுமக்களும் கலந்து கொண்டனர்.