சிறப்பு குறை தீர் திட்டம் : சேலத்தில் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி சிறப்பு குறை தீர் திட்டத்தை சேலம் வனவாசியில் தொடங்கி வைத்தார்.
இந்த புதிய திட்டத்தால் பொதுமக்களின் குறைகள் 4 மாதத்திற்குள் தீர்க்கப்படும்.மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் குறைதீர் முகாம்கள் நடத்தப்படும்.மொத்தமாக ரூ.76.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.ஒரு வட்டத்திற்கு ரூ.25000 வீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அனைத்து துறையினரையும் அடங்கிய குழுவினர் இந்த மாதத்திற்குள் மக்களை சந்திப்பார்கள். பொதுமக்கள் அதிகாரிகளை தேடி செல்வதற்கு பதிலாக, அதிகாரிகளே பொதுமக்களை நாடிவந்து குறைகளை தீர்க்கும் நிலையை உருவாக்கியுள்ளோம் .
சிறப்பு குறை தீர் திட்டபடி, அலுவல் குழுவினர் நேரடியாக பொதுமக்களிடம் சென்று மனுக்களை பெற்று, விரைவில் தீர்வு காண்பார்கள்.தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025