சென்னையில் அதிகம் பாதித்த 6 மண்டலங்களில் சிறப்புக்குழு .!
சென்னையில், உள்ள மண்டலங்களில் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்திய ஆலோசனைக்கு பின் வழங்கிய அறிவுரைகளில், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் மற்றும் நியாயவிலை கடைகளில் தகுந்த சமூக இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மேலும், சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களில் தண்ட்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர் , அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை , கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் கொரோனா அதிகமாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதனால், இந்த 6 மண்டலங்களில் தலா ஒரு களப்பணி குழுவும் , மற்ற 9 மண்டலங்களில் 3 மண்டத்திற்கு தலா ஒரு களப்பணி குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரில் நோய்த் தொற்று உள்ளவர்களின் தொடர்புகளை கண்டறிவதற்காக குழுக்கள் வலுப்படுத்தப்படுவதுடன், தொடர்பு இல்லாமல் நோய் தொற்று ஏற்படுகின்றதா.? என ஆராய்ந்து அவ்வாறு ஏதும் இருப்பின் அவர்களுடைய தொடர்புடையவர்களையும் விரைவாக கண்டறிய ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.