வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடக்கம்

வெளிநாட்டு முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்க்க அமைக்கப்பட்ட சிறப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது.தற்போது ஒரு சில தளர்வுகளுடன் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இதனிடையே தமிழக அரசு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தலைமை செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார் முதலமைச்சர் பழனிசாமி .
இந்நிலையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் தொடங்கியுள்ளது. தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையிலான சிறப்புக்குழு தனது முதற்கட்ட அறிக்கையை ஒரு மாதத்தில் தமிழக அரசிடம் வழங்க உள்ளது.இந்த கூட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.