பாடத்திட்டங்களை முடிக்கவே சிறப்பு வகுப்புகள்…! – அமைச்சர் அன்பில் மகேஷ்
சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடததப்படுவது, பாடத்திட்டங்களை முடிப்பதற்காக தான். இது பழைய நடைமுறை தான். இருப்பினும் இந்த நடைமுறை படிப்படியாக தளர்த்தப்படும்.
திருச்சி : திருச்சி பொன்மலைப்பட்டியில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார். அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், குழந்தைகள் மீதான பாலியல் தடுப்பு தினமான வரும் 19-ஆம் தேதி, சென்னையில் சிறப்பு நிகழ்வு ஒன்று நடத்தப்படவுள்ளது.
ஆசிரியர் கலந்தாய்வு விதிமுறைகள் அடுத்த வார இறுதியில் வெளியிடப்படும் என்றும், சனிக்கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் நடததப்படுவது, பாடத்திட்டங்களை முடிப்பதற்காக தான். இது பழைய நடைமுறை தான். இருப்பினும் இந்த நடைமுறை படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.