மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க இன்று முதல் சிறப்பு முகாம்!

Default Image

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள்.

ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.  அந்தவகையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று முதல் டிசம்பர் 31- ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

பண்டிகை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 மணி வரை மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் நடத்தப்படும். மின் கட்டணம் செலுத்தும் மின் அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறும். இதற்கு ஆதர் எண் மற்றும் மின் இணைப்பு எண் மட்டும் கொண்டு சென்றாலே போதும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, டிசம்பர் 31 வரை மக்கள் எவ்வித சிரமமுமின்றி வழக்கம்போல் மின்கட்டணம் செலுத்தலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதால் இலவசமாக வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் மின்சாரத்தில், எந்த மாற்றமும் இல்லை என்றும் கைத்தறி, விசைத்தறி மின் நுகர்வோர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மானியமும் தொடரும் எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார். ஆதாரை இணைப்பதால் மின் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் மின்சாரம், மானியத்தில் எந்த பாதிப்பு ஏற்படாது என்றும் கூறியிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்