வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்கு வெளியூருக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களது வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல, இன்று முதல் 3 நாட்களுக்கு 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் 4,575 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,975 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 5,920 பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்குச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ள நிலையில், கோயம்பேட்டில் இருந்து புறப்படும் ஆம்னி பேருந்துகள் வழித்தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல் 11 ஆம் தேதி வரை ஆம்னி பேருந்துகளின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி அதன்படி, வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படாது என்றும், நசரத்பேட்டை வழியாக வண்டலூர், கிளாம்பாக்கம் வெளிவட்டச் சாலை வழியே ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆம்னி பேருந்து சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…