தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக்கு கழகம் அறிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 5 வரை சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,225 பேரூந்துகளுடன் 3,090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கோவை, திருப்பூர், சேலம், பெங்களுருவில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 2,644 சிறப்பு பேருந்துகளும், ஏப்ரல் 6, 7ல் தினமும் இயக்கப்படும் 2,225 பேரூந்துகளுடன் 2,115 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல் சேலம், மதுரை, திருச்சி, தேனியில் இருந்து திருப்பூர், கோவைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சேலம், திருவண்ணாமலை, வேலூரில் இருந்து பெங்களூரு என மொத்தம் 1,738 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,215 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.