தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகள் இன்று முதல் தமிழகத்தில் இயக்கப்படும்!
இன்று முதல் தமிழகத்தில் தீபாவளிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
வருகின்ற 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த திருநாளில் மக்கள் அனைவருமே மகிழ்ச்சியாக தங்களது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக எப்பொழுதுமே சிறப்பாக பேருந்துகள் இயக்கப்படும். ஆனால், இந்த வருடன் கொரோனா ஊரடங்கு போடப்பட்டு சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே தமிழகம் முழுவதிலும் சிறப்பு ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படுகிறது. சில இடங்களில் கூடுதலாகவும் இயக்கப்படுகிறது, சென்னையிலிருந்து மட்டும் தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கத்திற்காக 9,510 பேருந்துகளும், மற்ற ஊர்களில் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இன்று முதல் வருகின்ற மூன்று நாட்களுக்கு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.