வரும் நவம்பர் மாதம் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் 1ஆம் தேதி பிறக்க உள்ளது அன்று முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல ஆரம்பித்து விடுவர். ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று நடைபெறும் மகரவிளக்கு பூஜை தரிசனம் வரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
சபரிமலைக்கு தென்னிந்தியாவில் இருந்து பக்த்ர்கள் வந்தாலும், தமிழகத்தில் இருந்து மட்டுமே அதிக அளவில் பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக சிறப்பு பேருத்துங்கள் இயக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
துவங்கியது கந்தசஷ்டி திருவிழா… திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்.!
தமிழக அரசு போக்குவரத்து கழக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரையில் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் / புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் மற்றும் சாதரண பேருந்துகள் ஆகியவை இயக்கப்பட உள்ளன. 27.12.2023 முதல் 30.12.2023 வரை சபரிமலை நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதால் 26.12.2023 முதல் 29.12.2023 வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மொத்தமாக குழுவாக செல்லும் பக்தர்களுக்கு அரசு சிறப்பு பேருந்து வாடகைக்கும் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 28 வரையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…