ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு… தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய அறிவிப்பு.!

Sabarimala Ayyappan Temple - TNSETC bus

வரும் நவம்பர் மாதம் 17ஆம் தேதி கார்த்திகை மாதம் 1ஆம் தேதி பிறக்க உள்ளது அன்று முதல் சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல ஆரம்பித்து விடுவர். ஜனவரி மாதம் பொங்கல் தினத்தன்று நடைபெறும் மகரவிளக்கு பூஜை தரிசனம் வரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

சபரிமலைக்கு தென்னிந்தியாவில் இருந்து பக்த்ர்கள் வந்தாலும், தமிழகத்தில் இருந்து மட்டுமே அதிக அளவில் பக்தர்கள் சபரிமலை செல்கின்றனர். அவர்கள் வசதிக்காக சிறப்பு பேருத்துங்கள் இயக்கப்படுகிறது என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

துவங்கியது கந்தசஷ்டி திருவிழா… திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஏற்பாடுகள் தீவிரம்.!

தமிழக அரசு போக்குவரத்து கழக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரையில்  சென்னை, திருச்சி, மதுரை, கடலூர் / புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் மற்றும் சாதரண பேருந்துகள் ஆகியவை இயக்கப்பட உள்ளன. 27.12.2023 முதல் 30.12.2023 வரை சபரிமலை நடை சாத்தப்பட்டு இருக்கும் என்பதால் 26.12.2023 முதல் 29.12.2023 வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதே போல மொத்தமாக குழுவாக செல்லும் பக்தர்களுக்கு அரசு சிறப்பு பேருந்து வாடகைக்கும் விடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல, சென்னையில் இருந்து நெல்லைக்கு வந்தே பாரத் சிறப்பு ரயில் நவம்பர் 16 முதல் டிசம்பர் 28 வரையில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
plane crashed in Kazakhstan
Pakistan airstrikes in Afghanistan
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai