மிகச் சிறந்த சேவைக்கான சிறப்பு விருதுகள் – முதல்வர் பழனிசாமி வழங்கினார்.!
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்த 5 பேருக்கு முதல்வர் பழனிசாமி விருது வழங்கினார்.
சென்னையை சேர்ந்த சி.எஸ்.ஐ. காதுகேளாதோர் பள்ளிக்கு சிறந்த தொண்டு நிறுவனத்திற்காக விருது வழங்கப்பட்டது. சிறந்த சமூக பணியாளர் திருச்சி சாந்தகுமார், சிறந்த மருத்துவராக சேலம் சியாமளாவுக்கு விருது தரப்பட்டது.
அதிக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு தந்த சக்தி மசாலாவிற்கு சிறப்பு நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு சிறந்த மாவட்ட கூட்டுறவு வங்கி விருது முதல்வர் வழங்கினார்.
கோவை கோதணவள்ளிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த சமூக பணியாளர் விருது அளிக்கப்பட்டது. கடலூர் கிரீடு நடனசபாபதிக்கு மகளிர் நலனில் சிறந்த தொண்டாற்றிய சிறந்த தொண்டு நிறுவன விருது. இன்று 74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி கொடியேற்றிய பின்னர் சிறப்பு விருதுகளை வழங்கினார் என்பது குறிப்பிடப்படுகிறது.