மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்ட காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ்க்கு டிஜிபி ஆறுதல் கடிதம்.
காவல் துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தனராஜ், தனது மகளின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்து கொள்ள விடுப்பு மறுக்கப்பட்டதால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், அதிகாரி சந்தனராஜ் அவர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு ஆறுதல் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், ‘தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்துகொள்ள தங்களுக்கு விடுப்பு மறுக்கப்பட்டதும் காணொளி வாயிலாக கண்டறிய நேர்ந்தது.
தங்களின் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடை பட்டதை அறிந்து நான் மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
இது போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் மறுக்கக் கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. விடுப்பு
வரும் நாள்களில் தங்களது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாள்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை இன்று இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…