jallikattu [File Image]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்தது. இன்னும் சில மாவட்டங்களில் நடைபெரும் வருகிறது. அந்த வகையில், இன்று மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ” அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளானது இன்று தொடங்கி ஜனவரி 28 வரையில் 5 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.
66 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக 66 ஏக்கரில் இந்த ஜல்லிக்கட்டு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ” அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார். ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காணும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு… எத்தனையாயிரம் காளைகள்.? எத்தனையாயிரம் வீரர்கள்.?
அரங்கம் திறக்கப்பட்ட பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், வரலாற்றில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை மாற்றுத்திறனாளிகள் கண்டுகளிக்கும் வகையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இதுவரை ஜல்லிக்கட்டு போட்டிகளின் வரலாற்றில் முதன்முறையாக அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை மாற்றுத்திறனாளிகள் கண்டுகளிக்கும் வகையில் அவர்களுக்காகவே பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 250 மாற்றுத்திறனாளிகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பலரும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வருகை தந்து இருக்கிறார்கள்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…
டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…