ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறை! போட்டியைக் காண மாற்றுத்திறனாளிகள் 200 பேருக்கு அனுமதி!

jallikattu

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல மாவட்டங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்தது. இன்னும் சில மாவட்டங்களில் நடைபெரும் வருகிறது. அந்த வகையில், இன்று மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ” அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.  இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளானது இன்று தொடங்கி ஜனவரி 28 வரையில் 5 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.

66 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரமாண்டமாக 66 ஏக்கரில் இந்த ஜல்லிக்கட்டு ‘கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் ”  அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று காலை திறந்து வைக்கிறார். ஒரே நேரத்தில் சுமார் 5 ஆயிரம் பார்வையாளர்கள் ஜல்லிக்கட்டு போட்டியை காணும் வகையில் கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு… எத்தனையாயிரம் காளைகள்.? எத்தனையாயிரம் வீரர்கள்.?

அரங்கம் திறக்கப்பட்ட பிறகு ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், வரலாற்றில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டியை மாற்றுத்திறனாளிகள் கண்டுகளிக்கும் வகையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இதுவரை ஜல்லிக்கட்டு போட்டிகளின் வரலாற்றில் முதன்முறையாக அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியை மாற்றுத்திறனாளிகள் கண்டுகளிக்கும் வகையில் அவர்களுக்காகவே பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 250 மாற்றுத்திறனாளிகள் இந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பலரும் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க வருகை தந்து இருக்கிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்