#Breaking : ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கம்.!
ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
வெளிமாநில தொழிலாளர்களை அவரவர்கள் சொந்த ஊர் செல்ல இந்தியா முழுவதும் சிறப்பு ரயில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்த ரயில் சேவை தமிழகத்தில் செயல்படாமல் இருந்துவந்தது.
இந்நிலைல்யில் வரும் ஜூன் 1 முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இந்த சிறப்பு ரயில் சேவை சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இருந்து செயல்பட உள்ளது.
கோவை, மயிலாடுதுறை, மதுரை, விழுப்புரம், திருச்சி, காட்பாடி ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில் சேவை இயங்க உள்ளது.