7.5 லட்சம் கோடி ஊழல்.! பாஜக மவுனம் காப்பது ஏன்.? முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்.!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது X சமுக வலைதள பக்கத்தில் இந்தியாவுக்கான குரல் (Speaking4India) என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பாஜக அரசு பற்றி பல்வேறு விமர்சனங்ளையும் , சிஏஜி அறிக்கை பற்றியும் பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், இந்தியாவுக்காக பேசுவோம் என்ற பெயரில் ஏற்கனவே முதல் எபிசோடு வெளியான பிறகு கலைஞர் மகளிர் உரிமை தொகை, திமுக பவள விழா ஆகிய்வற்றை தொடர்ந்து தற்போது 2வது எபிசோட் மூலம் உங்களிடம் பேசுகிறேன்.
நான் சமீபத்தில் ஓர் சமூக வலைதள பதிவு ஒன்றை பார்த்தேன். அதில், தாய்மார் ஒருவர் பேசுவது போல உள்ளது. அதில், முதல்வர் சொன்ன 1000 ரூபாய் வந்துவிட்டது. பிரதமர் சொன்ன 15 லட்சம் என்னாச்சி என்ற கேட்டுள்ளார். இந்திய மக்கள் கடந்த 2014, 2019 தேர்தல்களில் ஏமாந்துவிட்டனர். அதே போல, 2024ஆம் ஆண்டும் ஏமாந்துவிடக்கூடாது.
2014 தேர்தலுக்கு முன்னர் அப்போது குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி ஆட்சியின் கீழ் குஜராத்தில் தேனாறும், பாலாறும் ஓடுவது போல பொய் செய்தி பரப்பி ஆட்சிக்கு வந்தார்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 60 ஆண்டுகள் காங்கிரஸ் இந்தியாவை பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார்கள். 60 மாசம் கொடுங்கள் இந்தியாவை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்கிறோம் என்றார்கள்.
முதலில் ஒரு 60 மாதம் அடுத்து கூடுதலாக 60 மாதங்களை மக்கள் பாஜகவிடம் கூறினார்கள்.இப்போது இந்தியா முன்னேற்ற பாதைக்கு சென்றுவிட்டதா.? இதற்கு பிரதமர் தான் பதில் கூற வேண்டும். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் 5T தான் எனக்கு முக்கியம் என்று சொன்னனர். Tallent -திறமை, Trading – வணிகம், Traditional – பாரம்பரியம், Tourism – சுற்றுலா, Technology – தொழில்நுட்பம் இவைகளை நான் முன்னேற்றப்பாதைக்கு அழைத்து செல்வேன் என கூறினார். இதில் ஏதேனும் ஒன்றை முன்னேற செய்தாரா.?
என்னை பொறுத்தவரை 5C தான் அவர்கள் செய்த சாதனை, வகுப்புவாதம் (Communalism), ஊழல் முறைகேடு (Corruption), மூலதன குவியல் (Corporate Capitalism), மோசடி (Cheating), அவதூறு (Character Assassination) உள்ளிட்டவை தான் முன்னேறி உள்ளன.
பாஜகவின் விளம்பர அரசியல் முகத்திரை இந்தியா கூட்டணியின் தலைவர்களால் கிழிக்கப்பட்டு வருகிறது. அதனை அண்மையில் வெளியான சிஏஜி அறிக்கை அம்பலப்படுத்தி வருகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல், அயோத்தி விவகாரத்தில் கூட ஊழல் நடைபெற்றுள்ளது. ராமாயணம் நடைபெற்ற இடங்களுக்கு சுற்றுப்பயணம் அழைத்து செல்லும் திட்டத்தின் கீழ் உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் , ஹிமாச்சல் பிரதேசம், சீக்கிம், கோவா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது. அதில் பல கோடி ரூபாய் அளவில் முறைகேடு நடைபெற்றதாக சிஏஜி அறிக்கை வெளியானது.
UDAN திட்டத்தின் கீழ் ஏழை எளியவர்களும் விமானத்தில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 1089 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதற்காக 774 இடங்கள் ஒதுக்கப்பட்டு, அதில் 720 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில் சேலம், தஞ்சாவூர், நாமநாதபுரம், வேலூர் ஆகிய ஊர்களில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு அதில் வேலூரில் மடுட்மே செயல்படுத்தப்பட்டது . ஆனால் அதுவும் தற்போது செயல்பாட்டில் இல்லை.
2021 -2022 காலகட்டத்தில் இந்தியன் ரயில்வே 100 ரூபாய் வருவாய் ஈட்ட 107 ரூபாய் செலவு செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள பணத்தை பாஜக அரசு தங்கள் விளம்பர செலவுக்கு பயன்படுத்தி உள்ளது சிஏஜி அறிக்கையில் வெளியாகி உள்ளது. அதே போல டோல் பிளாசாவிலும் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றுள்ளது
உதாரணத்திற்கு 5 டோல் பிளாசாவில் சோதனை செய்து பார்த்ததில் மட்டும் முறைகேடாக வாகன ஓட்டிகளிடம் வசூல் செய்து 132 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது தெரியவந்துள்ளது. அப்படி என்றால் , இந்தியா முழுவதும் உள்ள டோல் பிளாசாவில் எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும்.?
சுகாதாரத்துறையில், 2009ஆம் ஆண்டு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டு திட்டம் போல, மத்திய அரசு 2018இல் செயல்படுத்திய ஆயுஷ்மான் பாரத் எனும் திட்டத்தின் கீழும் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. ஒரே ஆதார் கார்டில் பல மருத்துவமனைகளில் சிகிச்சை என்ற கணக்குகள், உயிரிழந்தோர் பெயரில் மருத்துவ கணக்குகள் என பல மோசடி நடந்துள்ளது.
இவ்வாறு சிஏஜி அறிக்கையின் படி மத்திய அரசு சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது பற்றி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் என யாரும் வாய்திறக்க மறுக்கிறார்க்ள. இதனை திறை திருப்ப பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்து தனது உரையினில் குறிப்பிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
#Speaking4India: Why is the BJP silent on the accusations of the CAG which exposed huge irregularities worth over Rs. 7.5 Lakh Crores ??? pic.twitter.com/Q61yDDqB9x
— M.K.Stalin (@mkstalin) September 23, 2023