சீமான் குறித்து பேசி என் தரத்தை நானே குறைத்துக்கொள்ள விரும்பவில்லை- துரைமுருகன்
சீமான் குறித்து பேசி என் தரத்தை நானே குறைத்துக்கொள்ள விரும்பவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொருளாளர் துரைமுருகன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,தமிழகம் முழுவதும் டெங்கு பரவிவரும் நிலையில் சுகாதாரத் துறை என்பது இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது என்றும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
டெங்கு பாதிப்பால் உயிரிழப்பு இல்லை என அமைச்சர் சொல்கிறார் ஆனால் பத்திரிக்கைகளில் தினந்தோறும் உயிரிழப்பு குறித்த செய்திவருகிறது அமைச்சர் பத்திரிக்கை படிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பினார்.
பொதுவாக தலைவர்கள் இறப்புக்கு பிறகு அவர்கள் குறித்து அவதூராக யாரும் பேசுவதில்லை இப்படி பேசுபவர்கள் தமிழக அரசியலில் இருக்கிறார்கள் என்பது வெக்க கேடு அவரை பற்றி பேசி நான் என் தரத்தை தாழ்த்திகொள்ள விரும்பவில்லை என்றார்