விரைவில் ஓபிஎஸ் மாநில ஆளுனர்.. இபிஎஸ் பாஜக தலைவர்.! அமைச்சர் உதயநிதி ‘காரசார’ பிரச்சாரம்.!
நேற்றைய ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், பாஜக, இபிஎஸ், ஓபிஎஸ் என எதிர்கட்சியினரை விமர்சித்து பிரச்சாரம் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி பிரச்சாரம் நாளுக்கு நாள் மிகவும் பரபரப்பாகி கொண்டே செல்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதாலும், பிரச்சாரம் முடியும் காலமும் நெருங்கி வருவதாலும், அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதரவு வேட்பாளருக்காக தீவிர பிரச்சரத்தில் ஈடுபாடு வருகின்றனர்.
பிரச்சாரம் : திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , தங்கள் கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக நேற்று இரண்டாம் நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பாஜக, இபிஎஸ், ஓபிஎஸ் என எதிர்க்கட்சியினர் மீது காரசார விமர்சனங்களை முன்வைத்தார்.
ஆடியோ – வீடியோ : அவர் பேசுகையில், பாஜக என்பது ஒரு கட்சியே இல்லை. அது ஆடியோ , வீடியோ வைத்து மிரட்டி வரும் ஒரு குரூப் அவ்வளோதான். நீ பேசினால் உன் வீடியோ ரிலீஸ் பண்ணிருவேன். நீ பேசினால் உன் ஆடியோ ரிலீஸ் பண்ணிருவேன் என மிரட்டி வரும் ஒரு குரூப் பாஜக என விமர்சித்தார்.
ஓபிஎஸ் – ஆளுநர் : மேலும், பாஜக என்பது ஒரு ஆளுநர் கோச்சிங் சென்டர் அவளோ தான். முன்னதாக இல.கணேசன் ஆளுநரானார். அடுத்து சிபி.ராதாகிருஷ்ணன் ஆளுநராகியுள்ளார். அதற்கும் முன்னதாக தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநரானார். என குறிப்பிட்டு, விரைவில் ஓ.பன்னீர்செல்வமும் ஏதேனும் ஒரு மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்படுவார். என விமர்சித்தார்.
இபிஎஸ் – பாஜக தலைவர் : அடுத்து, அதிமுக கட்சியை பாஜகவோடு இணைத்துவிட்டு எடப்பாடி பழனிச்சாமி பாஜக தமிழக தலைவராக மாறிவிடுவர் என நேற்றைய ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருந்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.