நீ கொஞ்சம் வாயை மூடு.. அரசு விழாவில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி.!
அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசுகையில், ஒரு பெண்ணை பார்த்து நீ கொஞ்சம் வாயை மூடு என கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், புதியதாக சீரமைக்கப்பட்ட பூங்கா திறப்பு விழா, மற்றும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.இதில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.
அமைச்சர் பொன்முடி பேச்சு :
அந்த விழாவில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், உங்களுக்கு ஏதேனும் குறைகள் இருக்கிறதா என கேட்டார். அப்போது அப்பகுதியில் இருந்த ஒரு பெண் , இங்கே எல்லாமே குறையாதான் இருக்கிறது என கூறினார்.
சர்ச்சை பேச்சு :
உடனடியாக அமைச்சர் பொன்முடி அந்த பெண்ணை பார்த்து, நீ கொஞ்சம் வாயை மூடு என கூறிவிட்டார். மேலும், உங்க கணவர் எங்கே என கேட்க, அவர் இறந்துவிட்டார் என அந்த பெண் கூறினார். உடனே, நல்ல வேலை இறந்துட்டார் என கூறி சிரித்தார். அந்த பெண் பற்றி அமைச்சரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.
ஓசியில் பயணம் :
சில மாதங்களுக்கு முன்னதாக அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் பேசுகையில், அரசின் இலவச பேருந்து கட்டண திட்டத்தை குறிப்பிட்டு, இப்போ எல்லோரும் ஓசியில் பயணம் செய்யுறீங்க என பேசியதும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.