இந்தியா ஒரு சனாதன நாடு.. சனாதனம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை.! ஆளுநர் ரவி பேச்சு.!
இந்தியா ஒரு சனாதன நாடு என்றும் சனாதனம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை என்றும் ஆளுநர் ரவி சென்னையில் ஒரு விழாவில் பேசியுள்ளார்.
சென்னை திருவெல்லிக்கேணி பகுதியில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா மடத்தின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். அப்போது சனாதன கொள்கை பற்றி மேடையில் பேசினார் .
ஆளுநர் ரவி பேசுகையில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது தான் சனாதன தர்மம். இந்த சனாதன தர்மம் துவங்க தமிழகம் முக்கிய பங்கு வகித்துள்ளது. சநதானத்தில் தீண்டாமை வலியுறப்படுவதில்லை. இந்தியாவுக்கு என்று ஓர் அறிமுகம் தேவைப்படுகிறது. ஆனால் பாரதத்திற்கு அறிமுகம் தேவையில்லை என்றும் ஆளுநர் ரவி பேசியுள்ளார்.