தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி வாகனங்கள் விபத்துக்குள்ளானது.
தமிழகத்தில் தேர்தலுக்கு நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினர் அனைத்து தொகுதிகளிலும் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரித்து வருகின்றனர். இதற்கிடையில், பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா உள்பட பலர் தமிழகத்தில் பிரசாரம் செய்தனர்.
இன்று பிரதமர் மோடி தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வருகை தருகிறார். தாராப்புரத்தில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மோடி பிரச்சாரம் செய்யவுள்ளார். இந்த பிரசார கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்நிலையில், தாராபுரம் அருகே சூரியநல்லூரில் சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி வாகனங்கள் விபத்துக்குள்ளானது. விபத்தில் 3 கார்கள் சேதம் அடைந்த நிலையில் 2 ஓட்டுனர்களுக்கு காயம் ஏற்பட்டது.
தாராபுரம் பிரச்சாரத்திற்கு வந்த முதல்வர் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற போது விழுந்து நடந்தது. சபாநாயகர் தனபால், அமைச்சர் வேலுமணி இருவருமே காரில் இல்லாததால் தப்பினர். முதலமைச்சர் காரில் அமைச்சர் வேலுமணி சென்றதால் இந்த விபத்து இருந்து அமைச்சர் தப்பினார்.
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…