நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கிய சபாநாயகர் அப்பாவு…!
நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்தை முதல்வரிடம் வழங்கிய சபாநாயகர் அப்பாவு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த டிச.19-ஆம் தேதி முன்னாள் மாணவர்கள் பங்களிப்புடன் அரசு பள்ளிகளை மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதன்படி முன்னாள் மாணவர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க இத்திட்டத்தை பள்ளி கல்வித்துறை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கு அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், சபாநாயகர் அப்பாவு, அரசு பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்திற்கு தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.